மாணவரின் வசதிக்கேற்ப நேர சூசியுடன் தனிப்பட்ட கவனத்துடன்கூடிய விசேட 1-1 வகுப்புகள்.
தனிப்பட்ட வகுப்புகள்
தனிப்பட்ட வகுப்புகள் என்பது ஒரு மாணவர் தங்கள் சொந்த வேகத்தில் மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப ஒரு தகுதியான ஆசிரிடம் கல்வி கற்கும் ஒரு சிறந்த வாய்ப்பு ஆகும். இது ஒரு மாணவர் தங்கள் தனிப்பட்ட பலவீனங்களை அடையாளம் கண்டு அவற்றை மேம்படுத்த உதவுகிறது.
EDUS இந்த தனிப்பட்ட வகுப்புக்கள் அனைத்தும் எமது உயர் தகமை வாய்ந்த பிரசித்தி பெற்ற வளவாளர்களினாலும் ஆசிரியர்களினாலும் மாணவர்களின் வசதிக்கேற்ப மாணவர் Coordinator ஊடாக ஒழுங்கமைக்கப்படும்.
Rs. 1,500 / மணித்தியாலம் (இலங்கை தேசிய பாடத்திட்டம்)
தனிப்பட்ட வகுப்புகளின் சில நன்மைகள் :
- மாணவர் தங்கள் சொந்த வேகத்தில் கற்க முடியும்.
- மாணவர் ஆசிரியருடன் தேவையான அனைத்து பாட விளக்கங்களையும் வகுப்பு நேரத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
- மாணவர் தங்கள் தனிப்பட்ட பலவீனங்களை அடையாளம் கண்டு அவற்றை மேம்படுத்த முடியும்.
- மாணவர்கள் தங்களது வசதிக்கேற்ற வகுப்பு நேரத்தினை பெற்றுக்கொள்ளலாம்.
- தேவையான மேலதிக வகுப்புகளை சிரமமின்றி ஏற்பாடு செய்யலாம்.
- எங்கிருந்தும் சிறந்த ஆசிரியர்களின் வழிகாட்டலில் கற்றிடலாம்.
- பெற்றோர் மாணவர் மீதான கண்காணிப்பும் கல்வி முன்னேற்றத்தின் முழு நடவடிக்கைகளும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு.
- மாணவர்களுக்கு பாதுகாப்பானதும் பெற்றோருக்கு போக்குவரத்து பிரச்சினைகள் அற்ற ஓர் நிரந்தர ஒன்லைன் வகுப்பறை.
ஒரு தனிப்பட்ட வகுப்புக்கான ஒரு ஆசிரியரை தேர்ந்தெடுக்கும்போது, பின்வரும் அம்சங்களை கருத்தில் கொள்ள வேண்டும்
ஆசிரியரின் தகுதிகள் மற்றும் அனுபவம்.
ஆசிரியரின் கற்பிக்கும் முறை (teaching style).
மாணவர் கற்கும் பாடத்திட்டம், நூல்கள் மற்றும் வகுப்பிற்குரிய நேரங்கள்.