EDUS https://edus.lk Online Institute Thu, 28 Mar 2024 12:25:38 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.2 https://edus.lk/wp-content/uploads/2021/11/favicon.png EDUS https://edus.lk 32 32 2024 பாடசாலைகளின் தவணைகள் தொடர்பான கல்வி அமைச்சின் புதிய அறிவிப்பு https://edus.lk/moe_new_announcement/ https://edus.lk/moe_new_announcement/#respond Thu, 28 Mar 2024 12:13:00 +0000 https://edus.lk/?p=16321 Download..!

The post 2024 பாடசாலைகளின் தவணைகள் தொடர்பான கல்வி அமைச்சின் புதிய அறிவிப்பு first appeared on EDUS.

]]>

Download..!

The post 2024 பாடசாலைகளின் தவணைகள் தொடர்பான கல்வி அமைச்சின் புதிய அறிவிப்பு first appeared on EDUS.

]]>
https://edus.lk/moe_new_announcement/feed/ 0
சாதாரண தரப் பரீட்சையின் பின்னரான விடுமுறை இனி இல்லை! கல்வி அமைச்சர் அறிவிப்பு https://edus.lk/no_leave_after_gce_ol/ https://edus.lk/no_leave_after_gce_ol/#respond Thu, 28 Mar 2024 08:49:07 +0000 https://edus.lk/?p=16318 கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்ததும் உடனடியாகவே, மாணவர்களுக்கு உயர்கல்வி வகுப்பை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டமிடப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்றையதினம் இடம்பெற்ற […]

The post சாதாரண தரப் பரீட்சையின் பின்னரான விடுமுறை இனி இல்லை! கல்வி அமைச்சர் அறிவிப்பு first appeared on EDUS.

]]>
கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்ததும் உடனடியாகவே, மாணவர்களுக்கு உயர்கல்வி வகுப்பை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டமிடப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சாதாரண தர பரீட்சையில் தோற்றியதன் பின்னர் பெறுபேறுகள் வரும் வரையான நான்கு மாத காலப்பகுதியில் அந்த மாணவர்கள் வேறு விடயங்களுக்கு உட்படுகின்றனர்.

புதிய வேலைத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் தொடர்ச்சியாக கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட முடியும்.

க.பொ.த. சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படுவதற்கு முன்பதாக க.பொ.த. உயர் கல்விக்கான வகுப்புகளை ஆரம்பிப்பதன் மூலம் பாடசாலைகளில் உயர் கல்விக்காக தோற்றும் 02 மாணவக் குழுக்கள் ஒன்றாக இணைக்கப்படுவர்.

இது எந்தப் பிரச்சினையையும் ஏற்படுத்தாது. அதற்கான இட முகாமைத்துவமும் அதிபர்களினால் ஒழுங்கு செய்யப்படும்.

கல்வி முன்னேற்றம் மற்றும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியுள்ளது. அதற்காக தேவையான மாற்றங்களும் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

க.பொ.த. உயர்தர விஞ்ஞான பாடத்துக்காக முதலில் 2001 ஆம் ஆண்டில் ஆங்கில மொழிக் கல்வியை அறிமுகப்படுத்தியதுடன், அது தற்போது 06ஆம் வகுப்பு முதல் க.பொ.த. உயர்தரம் வரை 500 பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதன்போது ஆங்கில பாடம் கற்பித்து அண்மைக்காலங்களில் ஓய்வு பெற்றுச் சென்றுள்ள ஆசிரியர்களை, மேலும் 03 வருட காலங்களுக்கு தற்காலிகமாக ஆசிரிய சேவையில் இணைத்துக் கொள்வதற்கு இதன்போது ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

அந்த காலகட்டத்தில் தற்போது பாடசாலைகளில் கற்பித்தலை மேற்கொள்ளும் ஆசிரியர்கள் அதற்கான பயிற்சியைப் பெற்றுக் கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

The post சாதாரண தரப் பரீட்சையின் பின்னரான விடுமுறை இனி இல்லை! கல்வி அமைச்சர் அறிவிப்பு first appeared on EDUS.

]]>
https://edus.lk/no_leave_after_gce_ol/feed/ 0
பாடசாலை உணவு வழங்கும் திட்டம் ஆரம்பம் – ஜனாதிபதி..! https://edus.lk/school-food-program-launch-president/ https://edus.lk/school-food-program-launch-president/#respond Mon, 25 Mar 2024 11:11:04 +0000 https://edus.lk/?p=16310 நாட்டின் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்காக அவர்களுக்கு பாடம் தொடர்பான அறிவை வழங்கி பரீட்சைகளுக்கு தயார்படுத்துவதைப் போன்றே அவர்களின் போசாக்கும் பாதுகாக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். அத்துடன் […]

The post பாடசாலை உணவு வழங்கும் திட்டம் ஆரம்பம் – ஜனாதிபதி..! first appeared on EDUS.

]]>
நாட்டின் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்காக அவர்களுக்கு பாடம் தொடர்பான அறிவை வழங்கி பரீட்சைகளுக்கு தயார்படுத்துவதைப் போன்றே அவர்களின் போசாக்கும் பாதுகாக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

அத்துடன் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழிநுட்ப அறிவை பிள்ளைகளுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவித்த ஜனாதிபதி, அதற்கமைவாக பாடசாலை கல்வி மற்றும் பரீட்சை முறைகளில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நாரஹேன்பிட்டி சுஜாதா மகளிர் கல்லூரியில் இன்று (25) முற்பகல் இடம்பெற்ற “2024 பாடசாலை உணவுத் திட்டம்” ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

 நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் பாடசாலையில் போசாக்கு உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்திற்கொண்டு மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு முன்னர் காலை 7.30 மணிக்கும் 8.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இந்தக் காலை உணவை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

“ஆரோக்கியமான சுறுசுறுப்பான தலைமுறை” என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன் இது உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புவதற்கான அடிப்படை நோக்கங்களை நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

9134 அரச பாடாசலைகளிலும், 100க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் ஆரம்ப வகுப்புகளில் உள்ள அனைத்து மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த வருட பாடசாலை உணவு வழங்கல் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்காவின் விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட ஏனைய அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன.

 

இந்த போசாக்குத் திட்டத்திற்கு தேவையான உணவு வகைகள், முக்கிய உள்நாட்டு விநியோகஸ்தர்களிடமிருந்து பெறப்படுவதுடன், நேரடி மற்றும் மறைமுகமான புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதன் ஊடாக நாட்டின் உற்பத்தி பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான பங்களிப்பாகவும் உள்ளது.

இந்தப் பாடசாலை உணவுத் திட்டம் தொடர்பான அனைத்து நிதி நிர்வாகங்களையும் வெளிப்படைத்தன்மையுடனும் அறிக்கைகளுடனும் முன்னெனெடுப்பதற்கான பொறிமுறையும் நடைமுறையில் உள்ளது. கொள்கை வகுக்கப்பட்டது முதல் அதன் அனைத்து முக்கிய நிர்வாக மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை கல்வி அமைச்சின் சுகாதாரம் மற்றும் போசாக்கு பிரிவு மேற்கொள்கின்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டமைக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அதிபர் திருமதி பிரியங்கிகா விஜேசிங்க நினைவுப் பரிசையும் வழங்கினார்.

 இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்ததாவது:

பாடசாலை உணவுத் திட்டம் இன்று ஆரம்பிக்கப்படுகிறது. அரசாங்கத்தின் எதிர்பார்ப்புகளில் ஒன்றை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பாக இந்த சந்தர்ப்பத்தை நான் பார்க்கிறேன். கல்விச் செயற்பாடு பூரணமடைவதற்கு, மாணவர்களுக்கு பாட அறிவை வழங்கி, பரீட்சைக்குத் தயார் படுத்துவதைப் போன்றே அவர்களின் போசாக்கையும் பாதுகாக்க வேண்டும். உலகில் பல நாடுகள் இந்த பாடசாலை உணவு திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.

நமது நாட்டில் போசாக்குக் குறைபாடு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது. ‘அஸ்வெசும’ திட்டத்தின் மூலம் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு வழங்கப்படும் நிதி நிவாரணத்தை மூன்று மடங்காக உயர்த்தியுள்ளோம்.

 பாடசாலை மாணவர்களிடையே போசாக்குக் குறைபாடு அதிகரிப்பதற்கு வருமான அளவு மட்டும் காரணம் அல்ல. சில மாணவர்கள் பாடசாலைக்குச் செல்வதற்காக காலை 6.00 மணியளவில் வீட்டை விட்டு வெளியில் வருகிறார்கள். இதனால் அவர்களுக்கு காலை உணவு சாப்பிட முடிவதில்லை.

மேலும் பகலுணவையும் சாப்பிட முடிவதில்லை. எனவே எந்த அந்தஸ்த்தை கொண்டிருந்தாலும்,எந்த இனத்தை அல்லது மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சகல மாணவர்களும் இந்த சிக்கலை எதிர்கொள்கின்றனர். எனவே, மாணவர்களுக்கு பாடசாலையில் உணவு கிடைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குவது மிகவும் அவசியம்.

 தற்போது நாட்டில் நவீன கல்வி முறையை உருவாக்குவதற்கு நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். 2024 ஆம் ஆண்டுக்கு மாத்திரமன்றி 2030 ஆம் ஆண்டுக்கும் உகந்த கல்வி முறையை உருவாக்க வேண்டும்.அந்தப் பணிகளை இப்போது செய்து வருகிறோம். ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல், நவீன தொழில்நுட்ப அறிவை வழங்குதல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், ஒவ்வொரு பாடசாலையிலும் செயற்கை நுண்ணறிவு திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். முதலில் பாடசாலைகளில் AI சங்கங்கள் தொடங்கப்பட வேண்டும். மேலும், தேசிய AI மையம் சட்டப்படி நிறுவப்பட உள்ளது.இந்த ஆராய்ச்சி மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் ஆயிரம் மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது என்பதைக் கூற வேண்டும்

 

அதன்படி, அடுத்த சில ஆண்டுகளில், செயற்கை நுண்ணறிவுத் திட்டத்தை ஆரம்பப் பாடசாலைகள் மட்டுமின்றி, உயர்கல்வி கற்பிக்கப்படும் அனைத்துப் பாடசாலைகளிலும் அறிமுகப்படுத்த உள்ளது.

நவீன தொழில்நுட்பத்துடன் நாம் முன்னேற வேண்டும். அந்த தொழில்நுட்ப அறிவை பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டும். அதன்படி, பாடசாலைக் கல்வி மற்றும் பரீட்சை முறையை மாற்றியமைப்பது குறித்து கவனம் செலுத்தியுள்ளோம். இந்த நவீன தொழில்நுட்ப அறிவோடு பிள்ளைகளின் ஆங்கில மொழி அறிவையும் வளர்க்க வேண்டும். அதற்கான திட்டங்களையும் வகுத்துள்ளோம் என்றும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.

கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த்:

பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு இந்த உணவுத் திட்டம் முன்பு செயல்படுத்தப்பட்டது.ஆனால் இந்த ஆண்டு முதல் முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்படும்.

 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதியமைச்சராக 16,600 மில்லியன் ரூபாவை இதற்காக ஒதுக்கியுள்ளார்.மேலும், ஐக்கிய நாடுகளின் உணவுத் திட்டம் மூலமாகவும் உதவி பெறப்படுகிறது.அதன்படி, 17 இலட்சம் ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கும் காலையில் போசாக்குள்ள உணவு வழங்குவது சாத்தியமாகியுள்ளது.

பரிந்துரைக்கப்பட்ட தரத்தில் போசாக்குள்ள உணவு வழங்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

கல்விகற்பிப்பதற்கு முன்னர் அனைத்து மாணவர்களின் வயிற்றையும் நிரப்புவதன் மூலம், சிறப்பாக கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பைப் பெறுகிறார்கள், இது மாணவர்களின் மன நிலையை சீர்செய்யவும் உதவுகிறது.

கடந்த மாதம் பாடசாலை மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. மேலும் சீருடைகள் சரியான நேரத்தில் வழங்கப்பட்டன. இன்று முதல் போசாக்குள்ள உணவு வழங்கப்படும்.ஆனால் இதற்கு ஊடகங்கள் மூலம் கிடைத்த பிரசாரம் மிகவும் குறைவு.பத்திரிகைகளில் போசாக்கு குறைபாடு பற்றிய செய்திகளை பெரிய எழுத்தில் வெளியிடும் ஊடக நிறுவனங்களும் இந்த போசாக்குள்ள உணவு வழங்கல் திட்டம் தொடர்பில் மக்களுக்கு தெரிவிக்கும் என நம்புகிறேன்.

கல்வி அமைச்சின் செயலாளர் திருமதி வசந்தா பெரேரா,

 கல்வித்துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தின் நீட்சியாக மாணவர்களின் போசாக்கை அதிகரிக்கும் வகையில் இன்று முதல் உணவுத்திட்டம் அமுல்படுத்தப்படுகிறது.கல்வி அமைச்சு என்ற வகையில், புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மூலம் எதிர்காலத்துக்கு ஏற்ற மாணவர் சமூகத்தை உருவாக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்.நவீன உலகிற்கு ஏற்ற கல்வி முறையுடன் கூடிய அறிவாற்றல் மிக்க சமுதாயத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும் என்று தெரிவித்தார்.

மேல்மாகாண ஆளுநர் மார்ஷல் ஆஃப் த எயார் போர்ஸ் ரொஷான் குணதிலக்க, இராஜாங்க அமைச்சர்களான விஜித பேருகொட, அரவிந்த குமார் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

The post பாடசாலை உணவு வழங்கும் திட்டம் ஆரம்பம் – ஜனாதிபதி..! first appeared on EDUS.

]]>
https://edus.lk/school-food-program-launch-president/feed/ 0
ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட தமிழ் பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை விடுமுறை https://edus.lk/monday-holiday-for-tamil-schools-in-the-hatton-educational-zone/ https://edus.lk/monday-holiday-for-tamil-schools-in-the-hatton-educational-zone/#respond Sat, 23 Mar 2024 14:29:55 +0000 https://edus.lk/?p=16299 ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட சகல தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹட்டன் வலயக் கல்வி பணிப்பாளர் இதனை தெரிவித்துள்ளார். ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் […]

The post ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட தமிழ் பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை விடுமுறை first appeared on EDUS.

]]>
ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட சகல தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் வலயக் கல்வி பணிப்பாளர் இதனை தெரிவித்துள்ளார்.

ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேக குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, பல தரப்பினரால் மாகாண கல்வி செயலாளரிடம் இதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மத்திய மாகாண ஆளுநர் லலித். யு. கமகேவின் அனுமதியுடன் எதிர்வரும் 25 ஆம் திகதி ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட சகல தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நாளுக்கான கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி சனிக்கிழமை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் ஹட்டன் வலயக் கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

The post ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட தமிழ் பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை விடுமுறை first appeared on EDUS.

]]>
https://edus.lk/monday-holiday-for-tamil-schools-in-the-hatton-educational-zone/feed/ 0
கடந்த ஐந்து ஆண்டுகளாக செயற்படாமல் உள்ள விளையாட்டு பாடசாலைகள் https://edus.lk/22-sports-schools-established-by-the-ministry-of-education-to-create-skilled-national-and-international-athletes-have-not-been-functioning-for-the-past-five-years-the-national-audit-office-has-said/ https://edus.lk/22-sports-schools-established-by-the-ministry-of-education-to-create-skilled-national-and-international-athletes-have-not-been-functioning-for-the-past-five-years-the-national-audit-office-has-said/#respond Fri, 22 Mar 2024 04:33:23 +0000 https://edus.lk/?p=16289 திறமையான தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு வீரர்களை உருவாக்கும் நோக்கில் கல்வி அமைச்சினால் ஸ்தாபிக்கப்பட்ட 22 விளையாட்டுப் பாடசாலைகள் கடந்த ஐந்து வருடங்களாக இயங்கவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் […]

The post கடந்த ஐந்து ஆண்டுகளாக செயற்படாமல் உள்ள விளையாட்டு பாடசாலைகள் first appeared on EDUS.

]]>
திறமையான தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு வீரர்களை உருவாக்கும் நோக்கில் கல்வி அமைச்சினால் ஸ்தாபிக்கப்பட்ட 22 விளையாட்டுப் பாடசாலைகள் கடந்த ஐந்து வருடங்களாக இயங்கவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக இப்பாடசாலைகளில் பயிலும் 293 விளையாட்டு புலமைப்பரிசில் பெற்ற மாணவர்கள் அந்தப் பாடசாலைகளை விட்டு வெளியேறியுள்ளதாகவும், விளையாட்டுப் பாடசாலைகளிலுள்ள விளையாட்டு உபகரணங்களும் பயன்படுத்தப்படாமையால் பயனற்ற நிலையில் உள்ளதாகவும் கணக்காய்வு அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

1989 ஆம் ஆண்டு விளையாட்டுப் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட போது

 

1989 ஆம் ஆண்டு விளையாட்டுப் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட போது, ​​எதிர்பார்த்த நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் அவற்றின் செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இதனால் அந்த பள்ளிகளில் தங்கும் விடுதிகள், விளையாட்டு உபகரணங்கள், உடற்கட்டமைப்பு உபகரணங்கள் போன்றவை பயன்படுத்தப்படாமல் உள்ளன.

The post கடந்த ஐந்து ஆண்டுகளாக செயற்படாமல் உள்ள விளையாட்டு பாடசாலைகள் first appeared on EDUS.

]]>
https://edus.lk/22-sports-schools-established-by-the-ministry-of-education-to-create-skilled-national-and-international-athletes-have-not-been-functioning-for-the-past-five-years-the-national-audit-office-has-said/feed/ 0
உயர்தர மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு…! https://edus.lk/2023-advanced-level-examination-practical-examination-for-engineering-technology-subject-to-commence-today-19/ https://edus.lk/2023-advanced-level-examination-practical-examination-for-engineering-technology-subject-to-commence-today-19/#respond Thu, 21 Mar 2024 09:59:44 +0000 https://edus.lk/?p=16283 2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் பொறியியல் தொழில்நுட்ப பாடத்தின் செயன்முறை பரீட்சை இன்று (19) முதல் நடைபெறவுள்ளது. குறித்த தகவலை இலங்கை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி 19ஆம் திகதி […]

The post உயர்தர மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு…! first appeared on EDUS.

]]>
2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் பொறியியல் தொழில்நுட்ப பாடத்தின் செயன்முறை பரீட்சை இன்று (19) முதல் நடைபெறவுள்ளது.

குறித்த தகவலை இலங்கை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அதன்படி 19ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 41 பரீட்சை நிலையங்களில் செயன்முறை பரீட்சை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சை அனுமதி அட்டை

பரீட்சார்த்தியின் அனுமதி அட்டையில் பரீட்சைக்கு தோற்றும் திகதி மற்றும் இடம் குறிப்பிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அத்துடன், குறித்த திகதி மற்றும் இடம் எக்காரணம் கொண்டும் மாற்றம் செய்யப்பட மாட்டாது என பரீட்சை திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை கடந்த ஜனவரி மாதம் நடைபெற்று முடிந்தமை குறிப்பிடத்தக்கது.

உயர்தர மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு | Announcement Al Student Department Of Examinations

The post உயர்தர மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு…! first appeared on EDUS.

]]>
https://edus.lk/2023-advanced-level-examination-practical-examination-for-engineering-technology-subject-to-commence-today-19/feed/ 0
ஆசிரியர்களுக்கு தென் மாகாண ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு: வெளியானது சுற்றுநிருபம் https://edus.lk/southern-province-governor-willie-gamage-has-issued-a-circular-prohibiting-government-school-teachers-from-enrolling-students-from-the-schools-they-teach-in-their-private-tuition-classes/ https://edus.lk/southern-province-governor-willie-gamage-has-issued-a-circular-prohibiting-government-school-teachers-from-enrolling-students-from-the-schools-they-teach-in-their-private-tuition-classes/#respond Thu, 21 Mar 2024 09:25:02 +0000 https://edus.lk/?p=16279 அரச பாடசாலை ஆசிரியர்களால் நடத்தப்படும் தனியார் வகுப்புகளில், அவர்கள் கற்பிக்கும் பாடசாலை மாணவர்களை இணைத்துக்கொள்ள கூடாதென தென் மாகாண ஆளுநர் வில்லி கமகேவினால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தென் மாகாண கல்வி […]

The post ஆசிரியர்களுக்கு தென் மாகாண ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு: வெளியானது சுற்றுநிருபம் first appeared on EDUS.

]]>
அரச பாடசாலை ஆசிரியர்களால் நடத்தப்படும் தனியார் வகுப்புகளில், அவர்கள் கற்பிக்கும் பாடசாலை மாணவர்களை இணைத்துக்கொள்ள கூடாதென தென் மாகாண ஆளுநர் வில்லி கமகேவினால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தென் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ரஞ்சித் யாப்பாவின் கையொப்பத்துடன் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தென் மாகாணத்தில் உள்ள ஆசிரியர்கள் அவர்கள் கற்பிக்கும் பாடசாலையின் மாணவர்களிடம் பணம் வசூலிக்கும் நோக்கில் தனியார் வகுப்புகளை நடத்தி பணம் அறவிடப்படுகின்றது.

இந்நிலையில், சுற்றறிகையை மீறும் ஆசிரியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.  

சுற்றுநிருபம் வெளியானது

இவ்வாறு பணம் அறவிடப்படுவதைத் தடைசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே கடந்த ஜனவரி மாதம் தெரிவித்திருந்தார்.

இதற்கமைய, இந்த சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு தென் மாகாண ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு: வெளியானது சுற்றுநிருபம் | Prohibition Of Conducting Private Coaching Classes

The post ஆசிரியர்களுக்கு தென் மாகாண ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு: வெளியானது சுற்றுநிருபம் first appeared on EDUS.

]]>
https://edus.lk/southern-province-governor-willie-gamage-has-issued-a-circular-prohibiting-government-school-teachers-from-enrolling-students-from-the-schools-they-teach-in-their-private-tuition-classes/feed/ 0
கல்விப் பாடத்திட்டத்தில் புதிய நடைமுறை : நவீனமயப்படுத்தப்படும் வகுப்பறைகள் https://edus.lk/memorandum-of-understanding-signed-to-implement-a-pilot-project-to-incorporate-artificial-intelligence-ai-in-the-information-technology-subject-for-students-above-grade-8/ https://edus.lk/memorandum-of-understanding-signed-to-implement-a-pilot-project-to-incorporate-artificial-intelligence-ai-in-the-information-technology-subject-for-students-above-grade-8/#respond Thu, 21 Mar 2024 07:18:03 +0000 https://edus.lk/?p=16268 தரம் 08 இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கான தகவல் தொழில்நுட்பப் பாடத்தில் (AI) செயற்கை நுண்ணறிவு விடயப்பரப்பை உள்வாங்குவதற்கான முன்னோடித் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.  கல்வி அமைச்சுக்கும் […]

The post கல்விப் பாடத்திட்டத்தில் புதிய நடைமுறை : நவீனமயப்படுத்தப்படும் வகுப்பறைகள் first appeared on EDUS.

]]>
தரம் 08 இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கான தகவல் தொழில்நுட்பப் பாடத்தில் (AI) செயற்கை நுண்ணறிவு விடயப்பரப்பை உள்வாங்குவதற்கான முன்னோடித் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. 

கல்வி அமைச்சுக்கும் மைக்ரோசொப்ட் நிறுவனத்திற்கும் இடையில் இன்று (19) ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டது.

20 மாவட்டங்களில் 20 பாடசாலைகளைத் தெரிவு செய்து தரம் 8 இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கான இந்த முன்னோடி திட்டத்தை செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, அதற்கு அவசியமான நவீன வகுப்பறைகளையும் தொழில்நுட்ப உபகரணங்களையும் வழங்குவதாக இங்கு குறிப்பிடப்பட்டது.

அதன்படி கல்விச் செயற்பாடுகளை தொழில்நுட்ப முறையில் முன்னெடுப்பதற்கான உதவிகளை மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் குழுவொன்று வழங்கவுள்ளது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைசாத்திடும் முன்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்றும் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

 

 

இதன்போது, பாடசாலை பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவை உள்வாங்குவதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக ஜனாதிபதியிடம், மைக்ரோசொப்ட் பிரதிநிதிகள் உறுதியளித்தனர்.

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இந்தியா மற்றும் தெற்காசிய பிராந்திய தலைவர் புனித் சந்தோக் (Mr. Puneet chinook),புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய செயற்கை நுண்ணறிவை இலங்கையில் அறிமுகப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கும் ஆதரவிற்கும் வழிகாட்டலுக்கும் பாராட்டு தெரிவித்தார்.

Gallery

The post கல்விப் பாடத்திட்டத்தில் புதிய நடைமுறை : நவீனமயப்படுத்தப்படும் வகுப்பறைகள் first appeared on EDUS.

]]>
https://edus.lk/memorandum-of-understanding-signed-to-implement-a-pilot-project-to-incorporate-artificial-intelligence-ai-in-the-information-technology-subject-for-students-above-grade-8/feed/ 0
மாணவர்கள் தொடர்பில் கல்வியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு https://edus.lk/education-ministry-to-involve-students-in-competitions-from-school-level-to-international-level/ https://edus.lk/education-ministry-to-involve-students-in-competitions-from-school-level-to-international-level/#respond Thu, 21 Mar 2024 06:34:53 +0000 https://edus.lk/?p=16262 பாடசாலைகள் மட்டத்திலிருந்து சர்வதேச அளவில் நடத்தப்படும் ஒலிம்பியாட்ஸ் போன்ற போட்டிகளில் மாணவர்களை ஈடுபடுத்த கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. பரிசளிப்பு நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, […]

The post மாணவர்கள் தொடர்பில் கல்வியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு first appeared on EDUS.

]]>
பாடசாலைகள் மட்டத்திலிருந்து சர்வதேச அளவில் நடத்தப்படும் ஒலிம்பியாட்ஸ் போன்ற போட்டிகளில் மாணவர்களை ஈடுபடுத்த கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

பரிசளிப்பு நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இதனைத் தெரிவித்தார்.

போட்டிகளுக்கு பாடசாலை மாணவர்களை தயார்படுத்துவதற்கான சந்தர்ப்பங்களை வழங்குவதற்கும், அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் சுற்று நிருபம் மூலம் அறிவுறுத்துவதற்கும் அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.

 

மாணவர்கள் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத்தில்

வரவிருக்கும் கல்வி சீர்திருத்தங்களில், மாணவர்கள் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத்தில் மட்டுமல்லாமல் தொழில்துறை மேம்பாட்டுத் துறைகளிலும் ஈடுபடுவதற்கும், அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரந்த வாய்ப்புகளை வழங்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவர்கள் தொடர்பில் கல்வியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு | Children In Olympiad Competitions Worldwide

The post மாணவர்கள் தொடர்பில் கல்வியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு first appeared on EDUS.

]]>
https://edus.lk/education-ministry-to-involve-students-in-competitions-from-school-level-to-international-level/feed/ 0
சாதாரண தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது..! https://edus.lk/the-ministry-of-education-has-released-the-time-table-for-the-20232024-g-c-e-ordinary-level-examination/ https://edus.lk/the-ministry-of-education-has-released-the-time-table-for-the-20232024-g-c-e-ordinary-level-examination/#respond Thu, 21 Mar 2024 05:51:58 +0000 https://edus.lk/?p=16254 2023(2024) ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான நேர அட்டவணையை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி 2023(2024) ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை மே மாதம் […]

The post சாதாரண தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது..! first appeared on EDUS.

]]>
2023(2024) ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான நேர அட்டவணையை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

இதன்படி 2023(2024) ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை மே மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது குறித்த பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

O/L Exam Time Tamil Preview

O/L Exam Time Table English Preview

O/L Exam Time Tamil Preview

The post சாதாரண தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது..! first appeared on EDUS.

]]>
https://edus.lk/the-ministry-of-education-has-released-the-time-table-for-the-20232024-g-c-e-ordinary-level-examination/feed/ 0