உயர்தர மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு…!

2023 AL Examination

2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் பொறியியல் தொழில்நுட்ப பாடத்தின் செயன்முறை பரீட்சை இன்று (19) முதல் நடைபெறவுள்ளது.

குறித்த தகவலை இலங்கை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அதன்படி 19ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 41 பரீட்சை நிலையங்களில் செயன்முறை பரீட்சை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சை அனுமதி அட்டை

பரீட்சார்த்தியின் அனுமதி அட்டையில் பரீட்சைக்கு தோற்றும் திகதி மற்றும் இடம் குறிப்பிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அத்துடன், குறித்த திகதி மற்றும் இடம் எக்காரணம் கொண்டும் மாற்றம் செய்யப்பட மாட்டாது என பரீட்சை திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை கடந்த ஜனவரி மாதம் நடைபெற்று முடிந்தமை குறிப்பிடத்தக்கது.

உயர்தர மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு | Announcement Al Student Department Of Examinations

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *