ஆசிரியர்களுக்கு தென் மாகாண ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு: வெளியானது சுற்றுநிருபம்

government school teachers

அரச பாடசாலை ஆசிரியர்களால் நடத்தப்படும் தனியார் வகுப்புகளில், அவர்கள் கற்பிக்கும் பாடசாலை மாணவர்களை இணைத்துக்கொள்ள கூடாதென தென் மாகாண ஆளுநர் வில்லி கமகேவினால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தென் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ரஞ்சித் யாப்பாவின் கையொப்பத்துடன் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தென் மாகாணத்தில் உள்ள ஆசிரியர்கள் அவர்கள் கற்பிக்கும் பாடசாலையின் மாணவர்களிடம் பணம் வசூலிக்கும் நோக்கில் தனியார் வகுப்புகளை நடத்தி பணம் அறவிடப்படுகின்றது.

இந்நிலையில், சுற்றறிகையை மீறும் ஆசிரியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.  

சுற்றுநிருபம் வெளியானது

இவ்வாறு பணம் அறவிடப்படுவதைத் தடைசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே கடந்த ஜனவரி மாதம் தெரிவித்திருந்தார்.

இதற்கமைய, இந்த சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு தென் மாகாண ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு: வெளியானது சுற்றுநிருபம் | Prohibition Of Conducting Private Coaching Classes

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *