கல்விப் பாடத்திட்டத்தில் புதிய நடைமுறை : நவீனமயப்படுத்தப்படும் வகுப்பறைகள்

Sri Lanka AI education

தரம் 08 இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கான தகவல் தொழில்நுட்பப் பாடத்தில் (AI) செயற்கை நுண்ணறிவு விடயப்பரப்பை உள்வாங்குவதற்கான முன்னோடித் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. 

கல்வி அமைச்சுக்கும் மைக்ரோசொப்ட் நிறுவனத்திற்கும் இடையில் இன்று (19) ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டது.

20 மாவட்டங்களில் 20 பாடசாலைகளைத் தெரிவு செய்து தரம் 8 இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கான இந்த முன்னோடி திட்டத்தை செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, அதற்கு அவசியமான நவீன வகுப்பறைகளையும் தொழில்நுட்ப உபகரணங்களையும் வழங்குவதாக இங்கு குறிப்பிடப்பட்டது.

அதன்படி கல்விச் செயற்பாடுகளை தொழில்நுட்ப முறையில் முன்னெடுப்பதற்கான உதவிகளை மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் குழுவொன்று வழங்கவுள்ளது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைசாத்திடும் முன்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்றும் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

 

 

இதன்போது, பாடசாலை பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவை உள்வாங்குவதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக ஜனாதிபதியிடம், மைக்ரோசொப்ட் பிரதிநிதிகள் உறுதியளித்தனர்.

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இந்தியா மற்றும் தெற்காசிய பிராந்திய தலைவர் புனித் சந்தோக் (Mr. Puneet chinook),புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய செயற்கை நுண்ணறிவை இலங்கையில் அறிமுகப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கும் ஆதரவிற்கும் வழிகாட்டலுக்கும் பாராட்டு தெரிவித்தார்.

Gallery

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *