இணைய வழி கல்வி! வெளியான விசேட அறிவிப்பு

இணையம் (ஒன்லைன்) அடிப்படையிலான கல்வி முறையை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், அனைத்து பாடங்களையும் 20 தொலைக்காட்சி அலைவரிசைகள் மூலம் நிகழ்ச்சிகளாக ஒளிபரப்ப அமைச்சரவை அமைச்சர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.

அமைச்சரவை இணைப் பேச்சாளர் வைத்தியர் ரமேஷ் பத்திரன இதனை தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் தொடர்பில் ஊடகங்களிடம் தகவல் அளித்த அவர், முதலாம் வகுப்பு முதல் உயர்தரம் வரையான பாடசாலை மாணவர்களுக்கான அனைத்து பாடங்களுக்கும் 20 கல்வி அலைவரிசைகள் மூலமாக இலவசமாக ஆரம்பிக்க அமைச்சரவை அமைச்சர்கள் ஒப்புக் கொண்டதாக குறிப்பிட்டார்.

இந்தநிலையில் ஒவ்வொரு கல்வி அலைவரிசையையும் அனைத்து தொலைக்காட்சி நிலையங்கள் வழியாக ஒளிபரப்புவதற்கான உரிமையை அரசாங்கம் கொண்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

இந்த திட்டம் எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதியன்று ஆரம்பிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

Source – Tamil win

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *